கொரோனாவை விட கொடியது நிபா.. 70% இறப்பு விகிதம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை காட்டிலும் நிபா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் என்று ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறியுள்ளனர். நிபா வைரஸ் இறப்பு விகிதம் கொரோனாவை விட அதிகமாக உள்ளது என ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் ராஜீவ் பால் எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிர்ழந்த நிலையில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா கால கட்டுப்பாடுகள் போல பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாளை அறிமுகமாகிறது விஸ்வகர்மா திட்டம்.. சிறுதொழில் கடன் பெற தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது? கொரோனா தொற்றை விட நிபா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. தற்போது நிபா வைரஸ் பாதிப்பற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால், ஆரம்ப கட்டத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. அப்போது நிபா ரைவஸ் தொற்று பாதித்து 17 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர். மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30ஆம் தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13ஆம் தேதியும் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அந்த நபர்களின் குடும்பத்தினரிடம் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழும் சரஸ்வதியும்: கார்த்திக்காக தமிழ் செய்த செயல்.. அர்ஜுன் குடும்பத்தை திட்டிய ராகினி.. டுவிஸ்ட் இதையடுத்து நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவி னர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாரித்தனர். அதில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித் தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புக்கு உள்ளாகு பவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்து வமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் உள்ள தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்து வமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தொற்று பாதிப்புக்கு உள்ளா கியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை நாளை வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் மையங்களும் மூடப்பட்டன. அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வருகிற 24ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன்.. 2 வருடங்களில் ஒருமுறை கூட சளி பிடிக்கவில்லை.. மனைவி பேட்டி இதனிடையே நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர்.

மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப் பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியிலும் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழிபாட்டுத் தலங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்க்கக் கூடாது, காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களைத் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல் லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் காணப்படும் நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. நிபா என்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவுக ளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

பின்னர் அது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம். நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது குணப்படுத்த தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸின் இறப்பு விகிதம் கோவிட் -19 ஐ விட அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மிக அதிகமாக உள்ளது. அதாவது கொரோனாவின் இறப்பு விகிதம் 2 – முதல் சதவிகிதமாக இருக்கும் நிலையில், நிபாவின் இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது. இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதால் நிபா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here