36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் கமலின் ‘பேசும் படம்’

சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை அமலா ஆகியோர் நடித்த ‘பேசும் படம்’ என்ற திரைப்படம் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியானது. கன்னடத்தில் ‘புஷ்பக விமானா’ என்ற பெயரில் ரிலீசான இந்த படம் வசனங்கள், பாடல்கள் என எதுவும் இல்லாமல் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்தும் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் ‘பேசும் படம்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதனை கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here