ஷா ஆலம்:
உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று முதல் சிலாங்கூரில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இன்று நடந்த 15வது சிலாங்கூர் மாநில சட்டசபையின் முதல் தவணையின் முதலாவது கூட்டத்தில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அஸ்மினை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கடந்த செப்டம்பர் 15 அன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்ததாக லாவ் கூறினார்.





















