கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மரங்கள் விழுந்து 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்ததோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கோலாலம்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி மேஜர் அஹ்மத் ஜுனைடி டுகுட் சோர்ஹார்டோ கூறுகையில், கெப்போங்கின் சுற்றுப்புறங்களில் 14 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு பள்ளியில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.

அந்த மரங்களில் ஒன்று பண்டார் மஞ்சலாராவில் ஜாலான் 26/62B இல் வீடு மற்றும் வாகனம் மீது மோதியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விழுந்த மரங்களால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகள் எஸ்.கே கெபோங் பாரு ஆகும், அங்கு விழுந்த மரங்கள் சுமார் 30 வாகனங்களை சேதப்படுத்தியுள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று அவர் த கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here