2023 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு மாநாடு

கோலாலம்பூர்:

2023 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 13ஆம் தேதி வரை கோலாலம்பூர் கான்வென்ஷன்ஸ் சென்டரில் (கேஎல்சிசி) நடைபெறும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்ததால் 2021இல் இந்த மாநாடு நடத்தப்படவில்லை என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

பல்வேறு தொழில்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 28 பேர் இந்தக் கருத்தரங்கில் பல்வகைத் தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வர். முதலாளி தரப்பினருக்கு நன்மைப் பயக்கக்கூடிய தொழிற்சந்தை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் அதில் முழுமையாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கலந்து கொள்ளும் இவர்கள் மனிதவளத்தை வளப்படுத்துதல், திவெட் எனப்படும் கல்வி, தொழில்நுட்பம், தொழில்பயிற்சி, சமூக, தொழிழ் நிர்வாகம் ஆகியவை குறித்து தெளிவான விளக்கங்களையும் தகவல்களையும் அளிப்பர்.

இந்தக் கருத்தரங்கானது மனிதவளத்தை மிக நுட்பமான முறையிலும் சீரிய முறையிலும் நிர்வகிப்பதற்குரிய வழிகாட்டுதலாக அமையும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் முதலாளித் தரப்பினர் கட்டணமில்லா 1-300-22-8000 எனும் எண்ணில் பெர்கேசோவைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் உள்நாட்டுப் பங்கேற்பாளர்கள் 019-6101294, 019-6057634, 019-6093342 என்ற எண்களிலும் வெளி நாட்டுப் பங்கேற்பாளர்கள் 017-6881641, 019-2400714 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது ipef.2023 @perkeso.gov.my என்ற மின்னஞ்ங்ல் வழியாகவும்  தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here