போலீஸ் என நம்பவைத்து தொலைபேசி மோசடி; வர்த்தகர் சுமார் RM120,000 இழந்தார்

ஈப்போ :

தெலுக் இந்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி சுமார் RM118,880 இழந்தார்.

48 வயதான பெண் வர்த்தகருக்கு கடந்த செப்.14 அன்று மோசடி செய்பவரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் தன்னை உள்நாட்டு வருவாய் வாரியத்தின் ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, RM58,982. தொகையான “பாக்கி” இருப்பதாக அவருக்குத் தெரிவித்தார் என்று, ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அஹ்மத் அட்னான் பஸ்ரி கூறினார்.

அந்த பெண் இந்த விஷயத்தை மறுத்துள்ளார், பின்னர் அவரது அழைப்பு “கேபிஎல் இஸ்கந்தர்” என்பவருடன் இணைக்கப்பட்டது,

பின்னர் “பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் மற்றொரு நபருடன் சேர்ந்து சதி செய்ததாக கேபிஎல் இஸ்கந்தர் குற்றம் சாட்டினார். விசாரணை நோக்கங்களுக்காக அவர் RM98,000 ஐ காவல்துறைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார், மேலும் வழக்கு முடிந்ததும் பணம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“அப்போது அவறது அழைப்பு ‘Sjn Redzwan’ என்பவருடன் இணைக்கப்பட்டது,இந்தக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் தூக்கு தண்டனை மற்றும் சவுக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று பயம் காட்டியதாகவும் மேலும் பாதிக்கப்பட்ட பெண் தினமும் 9am , 12pm , 3pm , 5pm மற்றும் இரவு 9 மணிக்கு அவர்களுக்கு செய்திகளை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதற்காக அவருக்கு 017-544 2015 என்ற WhatsApp எண் வழங்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர் செப்டம்பர் 15 அன்று காலை 11.05 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் Sjn Redzwan என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது, அதில் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நகைகள் உட்பட அனைத்து சொத்துக்களையும் அறிவிக்குமாறு அபாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறப்பட்டது.

பின்னர் கணவரின் வங்கிக் கணக்கு புத்தகத்தை படம் எடுக்கச் சொன்னார்,” என்று அவர் கூறினார். அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மோசடிக்காரர்களால் அனுப்பப்பட்ட இரு வங்கி கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கூறப்பட்டது. அப்பெண்ணும் அவ்வாறே (செப் 18) செய்தார்.

“அன்றிரவு, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் இந்த விஷயத்தை தெரிவித்ததுடன், அவரே காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார் என்றும், அதன் பின்னரே அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார் என்றார் ஏசிபி அகமட் அட்னான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here