கோலாலம்பூர்:
நாட்டில் வாழும் இந்தியர்களின் நலன் கருதி ம.இ.காவும் மலேசிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்ப்பட முடிவெடுத்துள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று ம.இ.கா தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய செயலவை கூட்டம் நடைபெற்றது. அதில் விக்னேஸ்வரனோடு கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ தி.மோகன், டத்தோ தோ.முருகையா, டத்தோ அசோகன், டத்தோ கோகிலன் பிள்ளை உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்களின் வாழ்வாதார பயண்த்தினை கணக்கில் கொண்டு ம.இ.காவும் மக்கள் சக்தி கட்சியும் இனி இணைந்து செயல்ப்பட ஒருமித்த முடிவெடுத்துள்ளோம்.
இனி இந்தியர்கள் சார்ந்த விவகாரங்களை இரு கட்சிகளும் இணைந்து எதிர்கொள்வோம் என் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.