அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. அவை புவி வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here