ரவி சாஸ்திரி வெளியிட்ட கணிப்பு

ஆனால், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இவர்கள் யாருமல்ல, இளம் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தான் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரம் என்று அடித்துச் சொல்லி, ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார்கள் யார் என்ற விவாதம் அனல் பறக்கும் நிலையில், பலரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்களைக் கைகாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இவர்கள் யாருமல்ல, இளம் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தான் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரம் என்று அடித்துச் சொல்லி, ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

“அடுத்த சூப்பர் ஸ்டார் சுப்மன் கில் தான்!” சமீபத்தில் ஒரு விளையாட்டு ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரியிடம், “இந்தியாவின் வளரும் நட்சத்திரம் யார்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், “இதில் எந்த சந்தேகமும் வேண்டாம், அது சுப்மன் கில் தான். அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சுவார்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாம் பார்த்தோம். அவருக்கு வயது வெறும் 25 தான்.
இந்த அனுபவத்தில் அவர் இன்னும் மெருகேறுவார். அவருடைய பேட்டிங்கில் ஒரு கம்பீரம் இருக்கிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் திறமையும் அவரிடம் உள்ளது,” என்று கில்லின் ஆட்ட நுணுக்கங்களைப் புகழ்ந்து தள்ளினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here