சடலங்களை கையாள லஞ்சம் வாங்கிய 4 மருத்துவமனை ஊழியர்கள் கைது

முஸ்லீம் அல்லாதவர்களின் சடலங்களை கையாள்வதற்கு சுமார் 11,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்டதாக அரசு மருத்துவமனையின் நான்கு மருத்துவ ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நெகிரி செம்பிலான் தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல், உடல் கையாளுதல் சேவைகளை வழங்கும் இரண்டு நிறுவனங்களிடமிருந்து 100 முதல் 600 ரிங்கிட் வரையிலான 42 வங்கி பரிவர்த்தனைகளில் சந்தேக நபர்கள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. நெகிரி செம்பிலான் மாநில எம்ஏசிசி தலைவர் அகமது தௌபிக் புத்ரா அவாங் இஸ்மாயில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். நாளை மறுநாள் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here