ஈப்போ:
ஈப்போவிலுள்ள ஒரு விடுதிக் கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்து, பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
பலியான 40 வயதுடைய உள்ளூர் நபர் விடுதிக் கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்ததில், அவரது உடல் ஆறாவது மாடியில் சிக்கிக்கொண்டதாகவும், அவர் இறந்துவிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
சம்பவம் குறித்த தகவல் காலை 9.29 மணிக்கு கிடைத்ததாகவும், உடனே ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.