தெய்வமே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது… கோயில் பூஜையில் குஷ்பு

தெய்வமே தன்னைத் தேர்ந்தெடுத்துள்ளதாக நடிகை குஷ்பு கோயில் பூஜையில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பிஸியாக வலம் வரக்கூடிய நடிகை குஷ்பு சமீபத்தில் திருச்சூரில் இருக்கும் விஷ்ணுமாயா கோயிலின்  சிறப்பு பூஜைக்காக சென்றுள்ளார். அவரை கோயில் நிர் வாகம் அழைத்து சிறப்பு செய்துள்ளது.

வருடாவருடம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கோயில் நிர்வாகம் சிறப்பு பூஜை செய்யும். அந்த வகையில் இந்த வருடம் நடிகை குஷ்புவை கோயில் நிர்வாகம் தேர்ந் தெடுத்துள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’திருச்சூரில் உள்ள விஷ் ணுமாயா கோயிலில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு அழைப்பார்கள்.

தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்’ என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here