ஆபத்தான அளவிலுள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்தக் காயை முயற்சி பண்ணுங்க

நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் உங்கள் உணவில் வெண்டைக்காயை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் இந்திய வீடுகளில் அடிக்கடி சமைக்கப்படும் ஓர் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் பொரியல், குழம்பு, காரக்குழம்பு என பலவகைகளில் சமைக்கப்படும், ஒரு பிரபலமான உணவு கலவையாகும். இது உங்கள் நாவிற்கு சுவையை வழங்குவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் ஒரு சூப்பர் உணவாகும்.

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் 2013 ஆம் ஆண்டு ஆய்வின்படி, வெண்டைக்காய் இரத்த சர்க்கரையை குறைப்பதில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வெண்டைக்காயின் ஊட்டச்சத்து மதிப்பு வெண்டைக்காய் ஒரு சத்தான காய்கறியாகும். இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

கலோரிகள்:

தோராயமாக 33 கலோரிகள் கார்போஹைட்ரேட்: சுமார் 7 கிராம் நார்ச்சத்து: தோராயமாக 3 கிராம் புரதம்: சுமார் 2 கிராம் கொழுப்பு: 1 கிராமுக்கும் குறைவானது வைட்டமின்கள்: வைட்டமின்கள் C, K மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். தாதுக்கள்: உண்ணக்கூடிய விதைகளுடன் கூடிய பச்சை நிற காய்கறியில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காயின் நன்மைகள் வெண்டைக்காய் உங்கள் பாலுணர்வை தூண்டும் ஓர் காய்கறியாகவும் உள்ளது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள இந்த காய், விரைவான சர்க்கரை அதிகரிப்பை தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

அதிக நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது வெண்டைக்காயில் குர்செடின் மற்றும் கேடசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவும்.

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் வெண்டைக்காய் உங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்த இந்த காய் உங்கள் உடலுக்கு உதவுகிறது. இன்சுலின் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

காலையில் வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலமா?

காலையில் வெண்டைக்காய் தண்ணீரைக் குடிப்பது நீரிழிவு நோய்க்கான சிறந்த வீட்டு வைத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். நறுக்கப்பட்ட வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரைக் குடிப்பது அடங்கும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று சிலர் நம்பினாலும், இந்த நடைமுறையை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன.

2015 ஆம் ஆண்டு யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி எலிகளின் இரத்த சர்க்கரை அளவை வெண்டைக்காய் நீர் மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், மனிதர்கள் மற்றும் வெண்டைக்காய் நீர் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவில் வெண்டைக்காயை நீங்கள் எப்போதும் சேர்த்துக்கொள்ளலாம், அதற்காக நீங்கள் நல்ல வெண்டைக்காயை தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்தளவு எண்ணெயை பயன்படுத்தி சமைக்க வேண்டும். நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கூடுதலாக அதிகரிக்க உங்கள் காலை ஸ்மூத்தியில் வெண்டைக்காயை நீங்கள் சேர்க்கலாம். வெண்டைக்காய் ஒரு நீரிழிவு உணவுக்கு மதிப்புமிக்க கூடுதலாக இருக்கலாம். ஆனால் அது ஒரு சீரான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட உணவு முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here