பெந்தோங்:
பெலாங்காய் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் (PN) மற்றும் பாரிசான் நேசனல் (BN) வெற்றி வாய்ப்புகள் 50:50 அதாவது சமமாக காணப்படுவதாக பாஸ் கட்சி செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹாசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மீதமுள்ள இரண்டு நாட்களில் அவர்களின் கடைசி கட்ட தேர்தல் பிரச்சார உத்தியின் மூலம், PN வெற்றி பெறும் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக நேற்று சிம்பாங் பெலாங்காயில் நடந்த ‘ ‘Pelangai Ready for Change’ பிரச்சாரத்தின் பின் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், PN வேட்பாளர் காசிம் சமத்தின் வெற்றி வாய்ப்பை பற்றி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.