ஷா ஆலம்,
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கி யிருக்கும் Carlsberg Malaysia பொறுப்புடன் நடந்துகொள்வதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தி வருகிறது.
இந்தப் பிரச்சாரத்தில் தன்னார்வ முறையில் 33 பணியாளர்கள் உதவுவதற்கு முன் வந்துள்ளனர். கோலாலம்பூரில் உள்ள 50 பார்களுக்கும் பப்களுக்கும் மாறி மாறிச் செல்லும் பயனீட்டாளர்களை டிரெவோ TREVO ஏற்பாட்டில் Buddy Drive உடன் Carlsberg Malaysia இணைந்து செயல்படுகிறது.
இவ்வாண்டு உலகப் பொறுப்புடன் பீர் அருந்தும் தினத்தை அனுசரிக்கும் வகையில் இந்தப் பொறுப்புடைமை திட்டத்தை கார்ல்ஸ்பெர்க் மலேசியா முன்னெடுத்தி ருக் கிறது. பூஜ்ஜிய பொறுப்பற்ற மது அருந்துதல் திட்டத்தில் தனக்கு உள்ள கடப்பாட்டை கார்ல்ஸ்பெர்க் மலேசியா அமல்படுத்தி வருகிறது. பொறுப்புடன் (CELEBRATE RESPONSIBLY) கொண்டாடுவோம் பிரச்சாரத்தை 8 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அனுசரித்து வருகிறது.
ரத்தத்தில் அனுமதிக்கப்படும் அல்கஹால் அளவைக் கொண்டிருக்க வேண்டியதில் விழிப்புணர்வை விதைப்பதை இப்பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.2023 அக்டோபர் 13, அக்டோபர் 20 ஆகிய நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.00 மணியில் இருந்து இரவு 11.00 மணி வரை சங்காட், செராஸ், சொலாரிஸ், மவுண்ட் கியாரா, பப்ளிக்கா, பிளாஸா அரக்காடியா, ஸ்ரீ பெட்டாலிங், ஹர்த்தாமாஸ், பழைய கிள்ளான் சாலை ஆகிய இடங்களுக்கு இச்சேவை ஈடுபடுத்தப்படும்.
கட்டணம் 53 ரிங்கிட். அடுத்தடுத்த பயணங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.





















