மலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய கம்போடியா தயாராக உள்ளது

கோலாலம்பூர்:

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் கம்போடியா விவசாயம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டித் டினா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, அந்நாடு மலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முதல் சந்திப்பு, விவசாயத் துறையில் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் கம்போடியா அரசும் விவசாயத்தில் முதலீடு செய்ய மலேசியாவை அழைத்தது.

இது தொடர்பில் KPKM வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மலேசியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான விவசாய வர்த்தகத்தின் மதிப்பு 17 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதாவது 2021 இல் RM375 மில்லியனாக இருந்த விவசாய வர்த்தகத்தின் மதிப்ப, 2022 இல் RM452.8 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here