ஷா ஆலம்:
நேற்று நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 14 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய கடல்சார் அமலாக்க துறை (MMEA) கைது செய்த போது, சுமார் ஒன்பது கிலோகிராம் எடையுள்ள சியாபு இருப்பதாக நம்பப்படும் எட்டு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பந்தாய் கெலானாங்கின் தென்மேற்கே 0.91 கடல் மைல் தொலைவில், பந்திங்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் MMEA செயல்பாடுகளின் துணை இயக்குநர் முகமட் ஷரென்லிசா கஸாலி தெரிவித்தார்.
தஞ்சோங் தோங்காக் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகு இருப்பது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு MMEA குழு அனுப்பப்பட்டது என்றார்.
அதிகாரிகள் இருப்பதை உணர்ந்து, படகில் இருந்த சிலர் கடலில் குதித்து, படகில் தப்பிச் செல்ல முயன்றனர், ஆனால் கிட்டத்தட்ட 20 நிமிட துரத்தலுக்குப் பிறகு MMEA குழு அவர்களைத் தடுத்து நிறுத்தியது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த படகில் பதிவு எண் இல்லை என்றும், அதில் 14 வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அவர்களில் 11 இந்தோனேசிய ஆண்கள், ஒன்பது பெண்கள் உட்பட, ஏனைய மூவர் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர் கூறினார்.
27 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரிடமும் சரியான பயண ஆவணங்கள் இல்லை.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் வெளிநாட்டவர்கள், போதைப்பொருள் பொட்டலங்கள் என்பன மேலதிக விசாரணைக்காக பூலாவ் இண்டா மரைன் போலீஸ் ஜெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.



















