அனைத்துலக பொது வேலை வாய்ப்புக் கருத்தரங்கு, விருதளிப்பு மாபெரும் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி

L.K. ராஜ்

கோலாலம்பூர்:

ன்முகத்தில் ஒற்றுமை மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கின்றது. அரசாங்கம் வகுக்கும் கொள்கைகளை அனுசரித்து திறன்மிக்க தொழிலாளர் பலத்தை வலுப்படுத்துவதில் அதீத பங்காற்றி வருபவர்களைக் கௌரவிப்பதில் மலேசிய அரசாங்கம் தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் கூறினார்.

பரஸ்பர மரியாதை, அரசு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படுவது போன்றவை இந்த வெற்றியின் அடித்தளமாக விளங்குகின்றன. தொழிலாளர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் களங்களாக பணி இடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் தனித்திறன் இருக்கிறது. அதனை அங்கீகரித்துப் பாராட்டும் மனப்பக்குவத்தை முதலாளி தரப்பினர் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

2023 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கை முன்னிட்டு நடத்தப்பட்ட  விருதளிப்பு, விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் பேசிய மனிதவள அமைச்சர், பணி இடங்கள் ஒவ்வொன்றும் தொழிலாளர், முதலாளி உறவுகளை வளர்த்தெடுக்கும் களமாக இருக்க வேண்டும். அதற்குரிய சுற்றுச்சூழலை முதலாளி தரப்பினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.

தொழிலாளர் தரப்பில் வெளிப்படுத்தப்படும் ஆக்கப் பூர்வமான தலைமைத்துவம் பயன்மிகு தொழிலாளர்களை உருவாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள  வேண்டும் என்பதை வலியுறுத்திய சிவகுமார், நாட்டின் துரித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய செயல்பாடுகளை ஒவ்வொரு முதலாளியும் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகவும் கட்டாயமாகவும் இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அணுகுமுறை நாட்டு நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. பரஸ்பர மரியாதை, கூட்டு முயற்சிகள் தற்போது ஙெ்யல்படத் தொடங்கி இருக்கின்றன என்று அவர் சொன்னார்.

பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான்

முன்னதாக இந்த விருது, விருந்துபசரிப்பு வந்திருந்த பிரமுகர்களையும் பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசிய பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், இந்த அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கில் ஏற்றமிகு கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பெல்ஜியம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நார்வே,  துருக்கி, அயர்லாந்து, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா மேலும் இதர நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் மலேசியாவை சிறந்த மனிதவளமிக்க ஒரு நாடாக மலேசியாவை உருமாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரின் சீரிய தலைமைத்துவத்தில் மலேசியத் தொழிலாளர் கொள்கையைப் பல்வேறு மாற்றங்களை அமல் படுத்தி வருகிறோம். முறையான கண்காணிப் போடு ஆக்கப்பூர்வமான கொள்கைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அமைச்சர் ஓய்வு ஒளிச்சலின்றி உழைத்து வருகிறார் என்று அவர் பாராட்டினார்.

மனித மூலதனம், சமூகப் பொருளாதார மேம்பாடானது சிறந்த மனிதவளத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு கலந்து  கொண்டிருக்கின்ற ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு வகையில் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியில் விருதுகள் பெறுவதற்கு 200க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதில் பங்கேற்ற அனைத்து முதலாளிகளையும் பாராட்டுகிறேன். விருது பெறாதவர்கள் சோர்ந்து விட வேண்டாம். அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்வேறு அமைச்சுகளைச் சேர்ந்த 12 ஜூரிகள் வெற்றியாளர்களைத் தேர்வு செய்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினரைத் தாம் மனமார பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சுபாஹான் கமால் கூறினார். மனிதவள அமைச்சின் ஆதரவு அளப்பரியது. பிரதான ஏற்பாட்டாளரான மனிதவள மேம்பாட்டுக் கார்ப்பரேஷன் (எச்ஆர்டி கார்ப்) ஆகிய தரப்புக்கும் தம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here