KL இல் நான்கு கேளிக்கை மையங்களில் போலீஸ் சோதனை

கோலாலம்பூர்:

கொம்ப்ளெக்ஸ் விலாயாவில் உள்ள நான்கு இரவுநேரக் கேளிக்கை மையங்களில் புக்கிட் அமான் சிஐடியினர் சோதனையிட்டனர்.

குறித்த பொழுதுபோக்கு நிலையங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஆபாச நடனங்கள் மற்றும் நடனமாடும்போது ஒவ்வொரு ஆடையாக அவிழ்ப்பது போன்ற செயல்களை வழங்குவதாக நம்பப்படுகிறது.

இந்த வளாகத்தில் நடக்கும் ஒழுக்கக்கேடான செயல்கள் பற்றித் தகவலைப் பெற்ற பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணிக்கு புக்கிட் அமான் சிஐடியின் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவு (D3) ஆகியோர் இணைந்து சோதனை நடத்தப்பட்டது.

புக்கிட் அமான் D3 பிரிவின் துணை இயக்குனர் ஃபாடில் மார்சஸ் கூறுகையில், இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதாகும்.

“இந்த சோதனையில் அங்கு வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் என நம்பப்படும் 71 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் 8 உள்ளூர் ஆண்கள் ஆகியோரையும், நடனக் கலைஞர்களாக பணியாற்றிய 34 பெண்களையம் நாங்கள் ஆய்வு செய்தோம்” என்றார்.

“குடியேற்ற விதிமுறைகளை மீறியதற்காக 37 நபர்களை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இந்த மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் டோக்கன்களை (போலி RM50 நோட்டுகளின் வடிவத்தில்) வாங்குவார்கள், பின்னர் நடன மாதுக்கள் மேடையில் நடனமாடும்போது வாடிக்கையாளர்கள் அந்த நோட்டுக்களை அப்பெண்கள் மீது வீசுவார்கள் என்றும், அப்பெண்களுக்கு வாடிக்கையாளர்களை மகிழ்விக்க சில ஆடைகளை கழற்றுவார்கள்,” என்றும் அவர் கூறினார்.

இந்த சோதனையின் போது விற்பனை நிலையங்களின் இரண்டு மேலாளர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தவிர 33 பங்களாதேஷ் ஆண்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் அடங்கிய வாடிக்கையாளர்கள் குடிவரவு சட்டத்தின் 6(1)(c) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here