ஜோகூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள கேளிக்கை மற்றும் சூதாட்ட மைய சோதனைகளில் வெளிநாட்டுப் பெண்கள், திருநங்கைகள் உட்பட 200 பேர் கைது

கோலாலம்பூர்:

ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 155 வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் 6 வெளிநாட்டு திருநங்கைகள் உட்பட மொத்தம் 197 பேர் கைது செய்ப்பட்டனர். இவர்கள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஜோகூர் பாருவில் உள்ள தமா ன் தம்போய் இண்டாவில் உள்ள கிளப்பில் வியாழக்கிழமை (அக். 12) புக்கிட் அமான் CIDயினர் சூதாட்டம் மற்றும் ரகசியச் சங்கங்கள் தடுப்புப் பிரிவினரால் (டி7) நள்ளிரவு 12.45 மணியளவில் முதல் சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குநர் (விசாரணை/சட்டம்) டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

“நாங்கள் 82 தாய்லாந்து பெண்கள், 2 லாவோஸ் நாட்டுப் பெண்கள் , ஒரு வியட்நாமியர் மற்றும் 6 தாய்லாந்து மாற்றுத்திறனாளிகள் அடங்கிய பெண்களை தடுத்து வைத்துள்ளோம். அத்தோடு 5 பங்களாதேஷ் ஆண்களையும் மூன்று உள்ளூர் ஆட்களையும், ஒரு மேலாளர் மற்றும் பணியாளர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (அக். 16) புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இதில் முதல் கிளப் ஒரு கடையின் நான்காவது மாடியில் இருந்தது என்றும், தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இயங்கியது என்றும் நேரடி இசைக்குழு நிகழ்ச்சிகளை குறித்த கிளப் வழங்கியது மற்றும் ஒரு அறைக்கு RM3,000 விலையில் இரண்டு கரோக்கி அறைகள் அங்கு இருந்தன,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டாவது சோதனை சனிக்கிழமை (அக். 14) இரவு சுமார் 11.45 மணியளவில் தாமான் பெரின்டஸ்ட்ரியன், பூச்சோங்கில் உள்ள ஒரு கிளப்பில் சோதனை செய்து, அங்கு 98 பேரை கைது செய்தனர்.

“அவர்களில் 63 தாய்லாந்து பெண்கள், 6 வியட்நாம் பெண்கள், ஒரு லாவோஸ் பெண் மற்றும் மூன்று தாய்லாந்து ஆண்கள் அடங்கிய 73 GROக்கள் இருந்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் போதைப்பொருளுக்கு நேர்மறையான பதிலை பதிவுசெய்த மொத்தம் 15 வாடிக்கையாளர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here