வசூல் வேட்டையில் ஜெயிலர் திரைப்படம்; 14 நாட்களில் 525 கோடியை தாண்டியது

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 163 கொடுக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

இது ரஜனிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஆழமாக அனைவர் மனதிலும் அசைக்க முடியாதவாறு பதிவு செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here