MYAirline-ன் இயக்க உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்

நிதி சிக்கலில் இருக்கும் MYAirline-ன் இயக்க உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு அவர்களின் உரிமத்தை நாங்கள் இடைநிறுத்துவோம் என்று லோக்  ஒரு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

விமான சேவை உரிமம் (ASL) மற்றும் ஏர் ஆபரேட்டர் சான்றிதழ் (AOC) ஆகிய இரண்டு உரிமங்கள் பொதுவாக விமான நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றன. ASL மற்றும் AOC ஆகியவை முறையே மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) ஆகியவற்றால் வழங்கப்படுகின்றன. MYAirline இன்று செய்தியாளர் மாநாட்டை நடத்தும் என்றும், CAAM குறைந்த கட்டண விமானம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும் லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here