கெமாமன் இடைத்தேர்தல்: முக்கிய தேதிகள் இன்று தெரியவரும் என எதிர்பார்ப்பு

கோலாலம்பூர்:

கெமாமன், திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள தேர்தலில் ஆணையக் கட்டடத்தில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே தலைமையில் நடைபெறும்.

தேர்தல் , வேட்புமனு தாக்கல் , வாக்களிப்பு, முற்கூட்டிய வாக்களிப்பு போன்றவற்றை நிர்ணயிப்பதற்கு பிற ஏற்பாடுகளை அறிவிப்பதற்கான சிறப்புக் கூட்டம் முடிந்தவுடன் அப்துல் கனி உடனடியாக செய்தியாளர் சந்திப்பு நடத்துவார்.

15வது பொதுத் தேர்தலில் (GE15) வாக்காளர்களை பாதிக்கும் நோக்கில் ஊழல் நடந்துள்ளது என்பதை மனுதாரர் வான் முகமட் ஹிஷாம் வான் அப்துல் ஜலீல் செப்டம்பர் 26 அன்று நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நிரூபித்ததை அடுத்து, பாஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய சே அலியாஸ் ஹமீதின் வெற்றியை திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 3-ம் தேதி, மனுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று பாஸ் கட்சி முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here