ஜோகூர் பாரு, ஜாலான் ஶ்ரீ ஆஸ்டின் 1, பண்டார் டத்தோ ஓன் பகுதியில் மரத்தின் மீது வாகனம் மோதியதில் 33 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை (அக் 17) அதிகாலை 2.24 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி நூர் அஷான் அகமது தெரிவித்தார்.
வாகனம் மரத்தின் மீது மோதியதால் ஓட்டுனர் உள்ளே சிக்கிக் கொண்டார். பலியானவரின் உடல் ஸ்பைனல் போர்டை பயன்படுத்தி வெளியே கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தில் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு அறிவித்தது என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வேனுடன், துறையைச் சேர்ந்த மொத்தம் எட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக நூர் அஸான் மேலும் கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 1987 ஆம் ஆண்டின் சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக தென் ஜோகூர் பாரு காவல்துறைத்தலைவர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.














