கிள்ளான்,
ஜிஎம் கிள்ளானில் பொருள்களை வாங்கும் அனுபவம் இப்போது புதுப் பொலிவு பெற்றுவிட்டது.
புத்துணர்வோடு, முழுமையாக்கப்பட்ட, பலதரப்பட்ட கூடுதல் காரணங்களுடன் என்று பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டே போகலாம் எனும் வகையில் இப்போது இந்த வணிக மையம் புது மெருகோடு விளங்குகிறது.
மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டாக இந்த 2026ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஜிஎம் கிள்ளான் பல்வேறான அணுகுமுறைகளை முன்னெடுத்துள்ளது.
பல்பொருள் விற்பனையகம், புத்துணர்வு, பிரதிபலிப்பு, சமூக நடைமுறைகள் என்று ஒரே குடையின் கீழ் பலதரப்பட்ட ஆக்ககரமான வளர்ச்சித் திட்டங்களைத் தன்னகத்தே கொண்டு ஓரிட வாழ்வியல் மையமாக ஜிஎம் கிள்ளான் இப்போது நவீனமய வசதிகளோடு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
கேபிட்னஸ் என்ற பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், தனிப்பட்ட வகையில் உணவுக் கூடத்தைக் கொண்ட 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஜென் 7 ஸ்னுக்கர் மையம், வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய வசதிக் கொண்ட டோர்மார்ட்(Doremart) பேரங்காடி ஆகிய மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டு இப்போது ஜிஎம் கிள்ளான் வணிக வளாகம் புதிய பொலிவோடு சீரமைக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎம் கிள்ளான் வணிக மையத்திற்கே புது வசீகரத்தை உண்டாக்கக் கூடிய புத்தம் புது அம்சங்கள் இப்போது இங்கு ஏராளமாக அமைந்திருக்கின்றன.
ஜிஎம் கிள்ளானுக்குப் புது தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் டோர்மார்ட் (Doremart) பேரங்காடி நாளை 14 பிப்ரவரி 2026 காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா காண்கிறது.
ஒருங்கிணைந்த வாழ்க்கை தரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையிலான இந்த பேரங்காடி 10,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரும்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சரவாவை மையமாகக் கொண்ட டோர்மார்ட் (Doremart) பேரங்காடி இதன் வழி முதன் முதலாக தீபகற்ப மலேசியாவில் வணிகத் தடம் பதிக்கிறது. தனது வணிகத் தளத்திற்கு ஜிஎம் கிள்ளானே சிறந்த வியூக மையமாகத் திகழும் என்ற வலுவான நம்பிக்கையோடு இந்த பேரங்காடியை டோர்மார்ட்(Doremart) நிர்வாகம் இங்கு திறந்திருக்கிறது. இது சாதாரண பேரங்காடி திறப்புவிழா என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே அமையப் பெறவில்லை மாறாக பரந்த இடத்தில் அமைந்திருப்பதால் பல்வேறு சாதகங்கள், கூடுதல் மதிப்பீடுகள் போன்ற அணுகூலங்களையும் இந்த பேரங்காடி கொண்டிருக்கிறது.
புதிய பேரங்காடி திறக்கப்படுவதை முன்னிட்டு பலதரப்பட்ட தினசரி பயனீட்டுப் பொருள்களுக்கு சலுகை விலையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைந்து வரும் ரம்ஜான் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்திச் செய்யக் கூடிய ஓரிட வணிக மையமாக திகழத் தக்க வகையில் ஏராளமான வசதிகளை இந்த டோர்மார்ட்(Doremart) பேரங்காடி கொண்டிருக்கிறது.
“அதிக எண்ணிக்கையிலான கடைகளைத் திறக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமல்ல. மாறாக இங்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே எங்களது தலையாய இலக்கு. அண்மையில் மை டேக் எனப்படும் மலேசிய சுற்றுலா தர உத்தரவாத திட்டத்தின் கீழ் ஜிஎம் கிள்ளான் மையத்திற்கு தங்க விருது அங்கீகாரம் வழங்கப்பட்டதானது எங்கள் சேவைத் தரத்தை மேலும் சிறப்புடையதாக்குவதற்கான ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது,” என்று ஜிஎம் கிள்ளான் முத்திரை (பிராண்ட்)தொடர்பு துறை மூத்த நிர்வாகி நோர்சுஹைடா ஒஸ்மான் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், உள்ளரங்கு ஃபுட்ஸால், பிக்லிபால், பாட்லிபால் மைதானத்தை அமைப்பது, குடும்ப கராக்கே மையத்தை அமைப்பது, அனைத்து வகையான வயது பிரிவினருக்கும் ஏற்புடைய பொழுதுபோக்கு கூறுகளைக் கொண்ட மையங்களை அமைப்பது ஆகிய திட்டங்களையும் ஜிஎம் கிள்ளான் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இவை அனைத்தும் ஜிஎம் கிள்ளானின் நீண்டகால அடிப்படையிலான வியூகத் திட்டங்களின் ஒரு பகுதி என்று விவரித்த அவர், இவ்வட்டாரத்திலேயே வணிக மையம், சுற்றுலா மையம், வாழ்க்கை முறைத் தன்மைகளில் சிறந்த மையமாக ஜிஎம் கிள்ளானை நிலைப்படுத்தும் இலக்கை உறுதிச் செய்வதற்கான ஆயத்தங்களாகும் இவை என்றும் அவர் டோர்மார்ட்(Doremart) பேரங்காடி திறப்பு விழா குறித்த செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.





















