ஒதுக்கீட்டிற்கு கடிதம் தேவையில்லை – எதிர்க்கட்சிகளுக்கு சமமான ஒதுக்கீடு கொடுங்கள் என்கிறார் பிகேஆர் MP

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு சமமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டால், நாட்டின் கொதிப்பான அரசியலை குளிர்விக்க முடியும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். இஸ்லாமிய உலகில் மரியாதைக்குரிய தலைவராக பிரதமர் அன்வார் இப்ராஹிம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அனைத்துலக அரங்கில் அவரது “நீதிக்கான கூக்குரல்” கேள்விக்குறியாகிவிடும் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் கூறினார்.

அற்ப விஷயங்களை அரசியலாக்காதீர்கள்… இதைத் தீர்ப்போம். தவிர, இந்த ஒதுக்கீடுகள் தேசிய பட்ஜெட்டில், (பிரதமர் துறையின்) கீழ் உள்ளது. அதனால் என்ன பிரச்சனை? (அன்வார்) அனைத்துலக அரங்கில் நீதி பற்றி பேசுகிறார். ஆனால் இது போன்ற (ஒதுக்கீடுகள்) பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ளன. நீதி இருந்தால் நமது அரசியல் சூழல் மேம்படும் என்று நான் நம்புகிறேன். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வந்தர்கள் அல்லர். இந்த உரிமை (சமமான ஒதுக்கீடுகள்) பள்ளிகள், மசூதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராமங்களை ஆதரிக்க உதவுவதாகும் என்று அவர் நேற்றிரவு எப்ஃஎம்டியின் எனிக்மா திட்டத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சமமான ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகளுடன் விவாதங்களோ புரிந்துணர்வு ஒப்பந்தமோ தேவையில்லை என்றும் ஹசான் கூறினார். செப்டம்பர் 19 அன்று, ஒதுக்கீடுகளைப் பெற எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய அன்வார், 2021 இல் இதேபோன்ற அணுகுமுறை எடுக்கப்பட்டது என்றும் கூறினார். அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒதுக்கீடுகள் கோரி கடிதங்களை சமர்ப்பிக்கவில்லை என பிரதிப் பிரதமர் ஃபதில்லா யூசோப் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம், PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்ககளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் முன்மொழியவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்களுக்கு ஒதுக்கீடுகளை நேரடியாக வழங்குவது புத்ராஜெயாவின் பொறுப்பு என்று கூறிய அவர், நிதிக்காக அவர்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.

கடந்த வாரம், பெர்சத்துவின் கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலிட், அன்வாரின் தலைமைக்கு தனது ஆதரவை அறிவித்தார். அரசியல் வேறுபாடுகள் காரணமாக தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் பின்தங்கியதையும், பின்தங்கியிருப்பதையும் தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here