ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கான அழைப்பை பாஸ் ஏற்கவில்லை என்கிறார் தக்கியுடின்

கோலாலம்பூர் :

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தில் இணைவதற்கான எந்த அழைப்பையும் பாஸ் ஏற்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசன் தெரிவித்துள்ளார்.

முன்னர் டைம்ஸ் பத்திரிகையின் நேர்காணலின் போது பிரதமர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் அது தொடர்பில் பாஸ் கட்சியுடன் அவர் அதற்கான சலுகைகள் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கான இந்த அழைப்பை பாஸ் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தக்கியுடின் ஹசன் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஸ் கட்சி இந்த அழைப்பை நிராகரித்துள்ளது என்றும் பிரதமரும் .

அதே நேரத்தில் துணைப் பிரதமரான ஜாஹிட் “நாங்கள் ஏற்கனவே இஸ்லாமியக் கட்சியான PAS உடன் பணிபுரிந்தோம், அவர்களுடன் ஒத்துழைத்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. அவங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தூக்கி எறிந்து விடுவார்கள்.. இதை ஏற்கனவே ஐந்தாறு முறை செய்திருக்கிறார்கள். அதனால் PAS உடனான தமது கட்சியின் கூட்டணி “சலிப்படைந்துவிட்டது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here