ஈப்போ:
கடந்த மே மாதம் Hup Yik Omni பேருந்து இயக்கத்தை நிறுத்தியதால், போக்குவரத்திற்கு சிரமப்பட்ட நிலையில் இருந்த அப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தாப்பா-பிடோர்-சுங்கை வழித்தடத்தில் பேருந்து சேவை நாளை புதன்கிழமை (நவம்பர் 1) மீண்டும் தொடங்கிறது.
தரைவழி பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (Apad) ஒப்புதலுக்குப் பிறகு, இந்த நடவடிக்கையை உடனடியாக தாம் செயலுக்கு கொண்டுவருவதாக பேராக் உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது நிசார் ஜமாலுடின் கூறினார்.
Hup Yik Omni பேருந்து பல தசாப்தங்களாக இந்த வழித்தடத்தில் இயங்கி வருவதாகவும், ஆனால் பொருளாதார சிக்கல்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், அது மாநில அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது என்றும் அவர் கூறினார்.
“இருப்பினும், Hup Yik Omni பேருந்து சேவைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன், அந்த நிறுவனம் திடீரென சேவை நிறுத்தியதை நான் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது” என்று முகமட் நிசார் அவரது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என்றும், மொத்தம் 20 பயணங்களில் ஈடுபடும் என்றும், வழியில் 25 நிறுத்தங்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.