தேசிய அணியால்  முடியும் ஆட்டக்காரர் டேனியல் 

இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் சிரியா அணியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் ஹரிமாவ் மலாயா அணி ௪மநிலை கண்டதை அடுத்து 2023 மலேசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மற்ற அணிகளின் திறமைக்கு மலேசிய அணியும் சவால் விடுக்கும் என தேசியத் தற்காப்பு ஆட்டக்காரர் டேனியல் திங் தெரிவித்துள்ளார்.

ஃபீஃபா தரவரிங்யைில் 91ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ள சிரியா அணியுடன் மலேசியா சமநிலை கண்டது தேசிய விளையாட்டாளர்களுக்குப் பெரும் உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

குறிப்பாக இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோர்டான் அணியுடனான ஆட்டத்தில் தேசிய அணியினர் கடுமையான போட்டியை வழங்கவும் இந்த நட்புமுறை ஆட்ட முடிவு உந்து௪க்தியாக அமைகின்றது.

மலேசியாவைக் காட்டிலும் சிரியா தரவரிசையைில் பல இடங்கள் தாண்டி முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இவ்வாட்டத்தில் நாங்கள் கடுமையான போட்டியை வழங்கியுள்ளோம் என்றுதான் நான் நம்புகிறேன். இதுவொரு நல்ல முறையிலான நட்புமுறை ஆட்டம் என்று அவர் பேசும் குரல் பதிவை மலேசியக் கால்பந்து நேற்று வெளியிட்டுள்ளது.

இதனிடையே 42 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மெரிட் அடிப்படையில் ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இ பிரிவில் இடம்பெற்றுள்ள மலேசிய அணி இம்மாதம் 16ஆம் தேதி ஜோர்டான் அணியையும் 20ஆம் தேதி பஹ்ரின் அணியையும் 25ஆம் தேதி தென் கொரியாவையும் எதிர்த்து விளையாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here