பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: RM800,000க்கு மேல் வசூலித்தது பேராக் JPJ

ஈப்போ:

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் இரண்டு ஏலத் தொடர்கள் மூலம் பேராக் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) இந்தாண்டு 118 வாகனங்களை விற்பனை செய்து, RM858,470 வசூலித்துள்ளது.

ஏலத்தில் 78 வாகனங்கள் (47 கார்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், 5 லோரிகள், 3 வேன்கள், ஒரு பேருந்து மற்றும் ஒரு ஜீப்) விற்கப்பட்டதாகக் கூறினார், அவற்றில் 60 வாகனங்கள் உரிமம் பெற தகுதியானவை என்றும், ஏனைய 18 உதிரிப்பாகங்களாக மாற்றி எடுக்கலாம் என்று பேராக் RTD இயக்குநர் முகமட் யூசுஃப் அபுஸ்தான் இன்று செவ்வாய்கிழமை (அக் 31) கூறினார்.

இந்த ஏலத்தில் மிட்சுபிஷி பஜேரோ ஜீப் RM24,000க்கு விற்கப்படடதான் மூலம் அதிக ஏலத்தைப் பெற்ற வாகனமாகவும், அதே சமயம் சுஸுகி RC110S மோட்டார் சைக்கிள் RM270 என்ற குறைந்த ஏலத்தில் விற்கப்ட்டது ” என்று அவர் ஏல அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here