சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளது. உலகில் மக் களின் கவனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன.
வினோதமான கட்டுமானங்களை உருவாக்குவதில் சீனர்கள் வல்லுநர்கள். சீனாவில் இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் China colossal Apartment என்ற பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் இப்போது மொத்தம் 30,000 பேர் வசிக்கின்றனர். இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்ட போது 20,000 பேர் அதில் வாழ்ந்தனர்.இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்க ளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.






















