மைடின் பேரங்காடியில் வண்ண தீபாவளி பிரச்சாரம்

சுபாங்ஜெயாவில் உள்ள மைடின் யுஎஸ்ஜே வண்ண வண்ண தீபாவளிப் பிரச்சாரத்தை நேற்றுத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில மனிதவளங்கள், ஏழ்மை துடைத்தொழிப்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தொடக்கி வைத்தார்.

இந்தத் தீபாவளித் திருநாளில் விளக்குகளின் ஒளி இல்லங்கள்தோறும் ஒளிர வேண்டும் எனும் நோக்கத்தில் இந்தப் பிரச்சாரத்தை மைடின் பேரங்காடி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

புன்னகையைப் பகிர்வோம் என்ற மைடின் பிரிஹாத்தின் திட்டத்தின் வழி அதன் சமூகப் பொறுப்புடைமையாக வசதி குறைந்தோருக்கு 500 ரஹ்மா உணவுப் பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பாட்டி வீட்டுச் சமையல் எனும் பாரம்பரிய சமையல் குறிப்புகளையும் இந்தியக் கலாச்சார தகவல்களையும் நாட்டின் பிரபல சமையல் கலைஞர் டேவ் பகிர்ந்து கொண்டார்.

விழாக்காலங்களில் மலேசியர்கள் இந்தக் கொண்டாட்டத்தின் உன்னதத்தைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மைடின் பேரங்காடி தீபாவளி வண்ணங்கள் என்னும் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. வசதி குறைந்தவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி எனும் ஒளியை ஏற்றி வைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்று மைடின் நிர்வாக இயக்குநர் அமிர் அலி பின் மைடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here