பிரபல மலையாள சீரியல் நடிகை தற்கொலை…

கேரளாவில் பிரபல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malayalam Actress Renjusha Menon, 35, Dies By Suicide In Her Trivandrum  Apartment | Actress Suicide: பெரும் சோகத்தில் திரையுலகம்! 35 வயதிலே மலையாள  நடிகை தற்கொலை - தூக்கில் தொங்கிய ...

மலையாள தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த ரெஞ்சுஷா மேனன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அற்புததீவு, பாம்பே மார்ச், காரியஸ்தன், ஒன் வே டிக்கெட், சிட்டி ஆப் கார்ட் போன்ற மலையாள படங்களில் அவர் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சின்ன திரையில் ஏராளமான சீரியல்களில் அவர் நடித்து வந்தார். மேலும் சில சீரியல்களை அவர் தயாரித்தும் வந்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை வீட்டில் சடலமாக மீட்பு! திரையுலகினர் அதிர்ச்சி – News18 தமிழ்

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான ரெஞ்சுஷா மேனன் சீரியல்கள் தயாரித்து வந்ததில், பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெஞ்சுஷாவின் மரணம் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here