ராமசாமி ஜாகிர் நாயக்கிற்கு1.52 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த நிதி திரட்டுகிறார்

கோலாலம்பூர்: முன்னாள் டிஏபி (ஜசெக) தலைவர் பி ராமசாமி, சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய 1.52 மில்லியன்  ரிங்கிட்டை வழங்க நிதி திரட்டும் திட்டத்தை தொடங்கினார். முன்னதாக, நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ், பினாங்கு முன்னாள் துணை முதல்வர் 2017 மற்றும் 2019 க்கு இடையில் ஐந்து அறிக்கைகளில் நாயக்கை அவதூறு செய்ததாக தீர்ப்பளித்தார். நான் ஒரு முன்னாள் அரசியல்வாதி. மற்ற அரசியல்வாதிகளைப் போல நான் பணக்காரன் அல்லர். எனக்கு பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதை  தவிர வேறு வழியில்லை.

நாங்கள் தேவையான தொகையை திரட்டுவோம், அதிகப்படியான நிதி சேர்ந்தால் ஏழை மாணவர்கள் உள்ளிட்ட தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று ராமசாமி  செந்தூலில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். தனது குழு நிதியை வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதாகவும், தனது முகநூல் பக்கம் மூலம் பொதுமக்களை தினமும் தகவல் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பொது மக்கள் வழங்கும் தொகையின் விவரங்களையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளித்தால், திரட்டப்படும் நிதி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ராமசாமி கூறினார். பின்னடைவு இருந்தபோதிலும், “இனத்தைப் பொருட்படுத்தாமல் குரலற்ற மலேசியர்களின் சார்பாக” தொடர்ந்து பேசுவதாக அவர் சபதம் செய்தார்.

அக்டோபர் மற்றும் டிசம்பர் 2019 இல், நாயக் ராமசாமி தன்னைப் பற்றி ஐந்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தார். அவை பல சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்பட்டன மற்றும் 2016 மற்றும் 2019 க்கு இடையில் பல செய்தி இணையதளங்களால் புகாரளிக்கப்பட்டன.

அவர் தனது அறிக்கையில், ராமசாமி ஏப்ரல் 10, 2016 அன்று தன்னை பேஸ்புக்கில் “சாத்தான்” என்று அழைத்து அவதூறு செய்ததாக குற்றம் சாட்டினார். மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை பெற்றிருக்கும் நாயக், அக்டோபர் 1, 2017 அன்று எப்ஃஎம்டி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் ராமசாமி தன்னை அவதூறாகப் பேசியதாகக் கூறினார். அதில் மலேசியா “இந்தியாவிலிருந்து தப்பியோடியவரை” அடைக்கலமாக வைத்திருப்பதாகக் கூறினார். இன்று தனது தீர்ப்பில், நாயக் தனது வழக்கை நிகழ்தகவுகளின் சமநிலையில் நிரூபித்ததாகவும், ராமசாமியின் பாதுகாப்பு “தகுதியற்றது” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஹயாதுல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here