ஈப்போ: கோல கங்சார் மாவட்டத்தில் உள்ள தங்க நகைக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11.22 மணியளவில் கொள்ளை சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று கோல கங்சார் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஒமர் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இரண்டு தங்க வியாபாரிகளை, முகக்கவசம் அணிந்த பலர் கத்திகள் மற்றும் சுத்தியல்களுடன் கொள்ளையடித்துள்ளனர் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சுமார் RM1.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
கடுமையான காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுடன் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 395/397 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும். கோல கங்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஏஎஸ்பி முகமட் சுப்கே அலியாஸை 013-928 5436 அல்லது 05-776 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு உமர் பக்தியார் கேட்டுக் கொண்டார்.








