சிலாங்கூரில் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்ட 569 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்:

ன்று மாலை 4 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 குடும்பங்களைச் சேர்ந்த 569 பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அங்குள்ள எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோம்பாக், உலு சிலாங்கூர், உலு லங்காட் மற்றும் செப்பாங் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள புத்ரா ஹைட்ஸ், கேமிலியா MPSJ பல்நோக்கு மண்டபத்தில் இயங்கிவந்த தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணிக்கு அம்மையம் முழுமையாக மூடப்பட்டது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here