இந்தியாவின் தடுப்பூசி மனிதர் என்று அழைக்கப்படுபவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியுமான ஆதார் பூனவல்லாவை பெரும் பாலான மக்களுக்கு தெரியும். கொரோனா, அவரை தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்தது. ஆதர் பூனவல்லாவின் மனைவி நடாஷா பூனவல்லாவை பற்றி அதிகம் பேர் தெரிந்திருக்க மாட்டார்கள்.
சிவனில் பாதி சக்தி என்பது போல் ஆதார் பூனவல்லாவில் பாதி நடாஷா பூனவல்லா. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செயல் செயல் இயக்குனராக உள்ளார். மேலும் பிரலமான சமூகவாதி மற்றும் நன்கொடையாளராக இருக்கும் நடாஷாவின் சொத்து மதிப்பு ரூ.660 கோடி. 1981ல் பிரமேஷ் அரோரா-மின்னி அரோரா தம்பதிக்கு இளைய வாரிசாக நடாஷா பூனவல்லா பிறந்தார்.
இவரின் மூத்த சகோதரர் அமித் அரோரா. நாடாஷா புனேவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் படித்தார் பின்பு சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தார். பின்பு 2004ல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2006ல் கோடீஸ்வர தொழிலதிபர் ஆதார் பூனவல்லாவை காதல் திருமணம் செய்தார்.
முன்பு, கோவாவில் விஜய் மல்லையா நடத்திய புத்தாண்டு விருந்தில் முதல் முறை யாக ஆதார் பூனவல்லாவும், நடாஷாவும் முதன் முதலாக சந்தித்தனர். கண்கள் கலந்து அவர்கள் காதல் வயப்பட்டனர், காதலுக்கு பின் கல்யாணத்தில் முடிந்தது. தற்போது பூனவல்லா தம்பதியனருக்கு சைரஸ் மற்றும் டேரியஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
நடாஷா தற்போது வில்லூ பூனவல்லா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். நடாஷாவும் ஆதார் பூனவல்லாவும் மும்பையில் உள்ள ரூ.750 மோடி மதிப்பிலான லிங் கன் ஹவுஸ் என்ற கிரேடு-3 மாளிகையில் வசிக்கிறார்கள். இந்த லிங்கன் ஹவுஸ் பின் னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது. இது 1933ல் பிரிட்டிஷ் கட்டிட கலைஞர் கிளாட் பேட்லியால் வடிவமைக்கப்பட்டது. வான்கனேர் மகாராஜா, எச்.எச். சர் அமர்சின்ஜி பனேசின்ஜி மற்றும் அவரது மகன் பிரதாப்சின்ஹ்ஜி ஜாலா ஆகியோருக்காக கட்டப்பட்டது.
1957ல் சொத்தின் உரிமை அமெரிக்க அரசாங்கத்துக்கு குத்தைக்கு சென்றது. மகா ராஜா தனது அரண்மனையை 999 ஆண்டுகளுக்கு நிரந்தர குத்தகை என்ற நிபந் தனையுடன் வெறும் 18 லட்சத்துக்கு அமெரிக்க அரசுக்கு லீசுக்கு வழங்கினார். இந்த மாளிகை அமெரிக்க தூதரக தலைமையிடமாக செயல்பட்டது.
புருனை சுல்தானின் சொகுசு வாழ்க்கை 2011ல் அமெரிக்க தூதரகம் இடமாற்றம் செய்ய முடிவு செய்தது, அந்த ஆண்டில் மாளிகை குத்தகை உரிமை ஏலம் விடப்பட்டது. 2015ல் பூனவல்லா குழுமத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லா அந்த மாளிகையை சுமார் ரூ.934 கோடிக்கு வாங்கினார்.





















