பெட்டாலிங் ஜெயா:
உலு சிலாங்கூரில் கார் மீது லோரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
ஜாலான் சுங்கை துவா, உலு யாமில் நடந்த விபத்தில் லோரி ஓட்டுநரும் காரில் பயணித்த 13 வயது சிறுமியும் காயமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
“உயிரிழந்த பெண் தனது வாகனத்தின் ஓட்டுநர் இருக்கை ஓரத்தில் சிக்கிக் கொண்டிருந்தார் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறிவித்தனர்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று அஹ்மட் முக்லிஸ் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
























