10.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 10 பேர் கைது

ஷா ஆலாம்:

டந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கிள்ளான் மற்றும் சுங்கை பூலோவைச் சுற்றி போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் RM10.4 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கைப்பற்றியதுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் கஞ்சா 261.766 கிராம், ஹெராயின் 216.051 கிராம் மற்றும் ஹெராயின் பேஸ் 15.498 கிராம் ஆகியவை அடங்கும். இது 2.38 மில்லியன் போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

“மேலும், அவர்களிடமிருந்து தோயோத்தா வெல்ஃபயர், ஹோண்டா ஸ்ட்ரீம் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற பல வாகனங்களையும், வங்கிக் கணக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர், பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு RM269,229 என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 18 முதல் 44 வயதுடைய 10 ஆண்களும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர்கள் என்ற சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களில் நான்கு பேர் போதைப்பொருள் சோதனையில் நேர்மறையானபதிலை பதிவு செய்ததாகவும் ஹுசைன் கூறினார்.

10 சந்தேக நபர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடைய கடந்தகால குற்றவியல் பதிவுகளையும் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ், விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நவம்பர் 3 முதல் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here