வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கெமாமன் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில், இத் தொகுதி அம்னோவின் கோட்டையாக காணப்படுவதால் இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்த ஜாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட அவதூறுகள் காரணமாகவும், எதிர்க்கட்சிகளின் அசாதாரண நிதி ஆதாரங்கள் காரணமாகவும் 15-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கட்சி அத்தொகுதியில் தோல்வியடைந்ததாகத் துணைப் பிரதமருமான ஜாஹிட் கூறினார்.
மேலும் கெமாமன் தொகுதி பாஸ் கட்சியின் அரண் அல்ல. மாறாக, அது அம்னோவின் கோட்டை என்று தாம் உணர்வதாக அவர் மேலும் கூறினார்.
கெமாமன் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் டான்ஸ்ரீ ராஜா முகமது அஃபாண்டி ராஜா இடைத்தேர்தலில்பாதுகாப்புப்முகமட் நூர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.