வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிராக 2,665 சம்மன்களை விதித்தது JPJ

புத்ராஜெயா:

பொது சேவை வாகனங்கள் மீதான சிறப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கை கடந்த நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிராக சாலைப் போக்குவரத்துத் துறை 2,665 சம்மன்களை விதித்துள்ளது என்று ஜேபிஜே மூத்த அமலாக்க இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, மொத்தம் 224,616 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 717 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 21,327 வாகனங்கள் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக JPJ யால் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வணிக நோக்கங்களுக்காக தனியார் வாகனங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் மொட்டை டயர்கள் போன்ற தொழில்நுட்ப மீறல்கள் ஆகியவற்றுக்காக பெரும்பாலான் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here