IPR வருமான முன்முயற்சி மூலம் இதுவரை 4,100 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்- பொருளாதார அமைச்சர்

கோலாலம்பூர்:

ஏழைகள் மற்றும் B40 குழுவினரின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட IPR வருமான முன்முயற்சி மூலம் இதுவரை 4,100 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வறுமையை ஒழிக்கும் நோக்கமாக அரசாங்கம் செயல்படுத்திய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகளில் IPR ஒன்றாகும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.

“செயல்படுத்தப்பட்ட மக்கள் வருமானத் திட்டம், பங்கேற்பாளர்களுக்கு ஆதரவாக வழங்கப்படும் முழுமையான சூழல் மற்றும் பணமில்லாத உதவி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கூறிய அவர், கூடுதல் வருமானத்தை உருவாக்க பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது,” என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் இசாம் முஹமட் இசாவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது ரஃபிசி இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here