பார்க்கிங் தகராறு தொடர்பாக இரு பெண்களுக்கிடையில் கைகலப்பு-ஸ்தாப்பாக்கில் சம்பவம்

கோலாலம்பூர்:

மீபத்தில் ஸ்தாப்பாக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

Setapak 文良港分享交流区 என்ற பேஸ்புக் குழுவில் வெளியிடப்பட்ட பள்ளிக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாக நடந்ததாக நம்பப்படும் அந்த வைரல் வீடியோவில், சிவப்பு நீர் சட்டை அணிந்த பெண், சற்று வயதானவராக காணப்படும் மற்றொரு பெண் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்து, அவரது கார் ஜன்னல்களில் பலமாக தட்டியதைக் காட்டியது.

சிவப்பு மேலாடை அணிந்த பெண் மற்ற கார் டிரைவரை ( சற்று வயதானவராக காணப்படும் பெண்மணி) வேறு இடத்திற்குச் செல்லும்படி சைகை செய்கிறார் – பலமுறை அந்த காரின் கண்ணாடியை தட்டுகிறார். பின்னர் அவர் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார் .

இருப்பினும், சிவப்பு நிற உடையணிந்த பெண் திருப்தி அடையாததால், மீண்டும் திரும்பி, புரோத்தோன் எக்ஸோராவை ஓட்டும் வயதான பெண்ணின் பின்னால் சென்றார். அவள் கார் கண்ணாடியை ஒரு முறை கடுமையாக தட்டினாள், பின்னர் அந்த வயதான கார் ஓட்டுநரான பெண் காரிலிருந்து வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகும் அந்த பெண் சிவப்பு நிற உடையைந்த பெண் பார்க்கிங் பிரச்சினை பற்றி வாதிட்டார். கடுமையான வாக்குவாதம் சண்டையாக மாறியது.

மற்றொரு வீடியோவில், இரண்டு பெண்களும் மிகவும் தீவிரமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர், இதனால் அஃகிருந்த பொதுமக்கள் வந்து இருவரையும் பிரிக்க முயன்றதை அந்தக் காணொளியில் காணமுடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here