ஊழியர்களுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு-மெட்ரிக்ஸ் அதிரடி

(News by:our Reporter நாகேந்திரன் வேலாயுதம்)
சிரம்பான்,
மெட்ரிக்ஸ் கான்செப்ட் குழுமத்தின் கீழ் செயல்படும் மாவார் மருத்துவமனை வாரிய இயக்குநர்களாக டத்தோ லோகேந்திரன் உட்பட எழுவர் போட்டியின்றி தேர்வுப் பெற்றனர்.
நேற்று இங்கு மாவார் மருத்துவமனை மண்டபத்தில் நடைப்பெற்ற 26 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அதன் உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தலைவராக டத்தோஸ்ரீ லீ தியான் ஹோக் மற்றும் உதவித் தலைவராக டத்தோ லோகேந்திரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக இக்கூட்டத்தை தொடக்கிவைத்து தலைமையுரையாற்றிய டத்தோஸ்ரீ லீ, இம்மருத்துவமனையில்  3 ஆயிரம் ரிங்கிட் கீழ் மாதச் சம்பளம்  பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதமும், 3,001 தொடங்கி 6 ஆயிரம் ரிங்கிட் வரையில் மாதச் சம்பளம் பெறுவோர்களுக்கு 7.5 சதவீதம், 6,001 ரிங்கிட்டிற்கும் மேல் சம்பளம் பெறுவோர்களுக்கு 5 சதவீதம் என சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
உதவித் தலைவர் டத்தோ லோகேந்திரன்

மேலும் இம்மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மற்றும் வெளி மருத்துவ ஆலோசகர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் என சிறப்பு வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், இவை அனைத்தும் கடந்த அக்டோபர் 1 தேதியில், மாதந்திர சம்பளத்துடன் ஒருசேர வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மெட்ரிக்ஸ் கான்செப்ட் குழுமத்தில் மெட்ரிக்ஸ் மெடிகேர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சிரம்பானில் உள்ள மாவார் மருத்துவமனை மற்றும் சிஎம்எச் மருத்துவமனை ஆகிய இரு தனியார் மருத்துவ மையங்கள் நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்ட மருத்துவமனை எனும் அங்கீகாரம் பெற்றவை என குறிப்பிட்டார்.
அதே வேளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவார் மருத்துவமனையின் புதிய நிர்வாகத்தை ஏற்ற வேளையில், அம்மையம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்து, அதனை சமாளிக்கு மெட்ரிக்ஸ் மெடிகேர் நிறுவனத்திடமிருந்து சுமார் 29.5 மில்லியன் ரிங்கிட் கடனாக பெற்றது. அக்கடனை இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கி மாதந்தோறும் 5 லட்சம் தொடங்கி 10 லட்சம் ரிங்கிட் என அடுத்த ஐந்தாண்டுக்குள் முழுமையாக செலுத்தப்படும் என தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டின் வருமானமாக 60 மில்லியன் ரிங்கிடை  அடைய வேண்டும் என்பது கடந்த ஆண்டின் இலக்காக கொண்டிருந்தோம், ஆனால் 62.5 மில்லியன் ரிங்கிட்டை எட்டிவுள்ள வேளையில், அடுத்து 2024 ஆம் ஆண்டின் இலக்கு 80 மில்லியன் ரிங்கிட் ஆகும் என லீ தெரிவித்தார்.
இதனிடையே இம்மருத்துவமனையில் மொத்த கட்டில்கள் தற்போது 57 மட்டுமே உள்ள வேளையில், மேற்கொண்டு சுகாதார அமைச்சு மேலும் 20 கட்டில்களுக்கு அனுமதி அளித்துள்ள வேளையில், அதன் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தாண்டு மேலும் 20 கட்டில்களுக்கு அனுமதி கேட்டு அமைச்சுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் அந்த எண்ணிக்கை மேலும் 97 ஆக உயரும் என லீ நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here