திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் வாரிய இயக்குநர்களாக டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் – Mo Shun zong நியமனம்

Pபுத்ரா ஜெயா:

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (PTPK) புதிய வாரிய இயக்குநர்களாக காஜாங் நியூ எரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Mo Shun zong மற்றும் பைனரி பல்கலைக்கழகத்தின் தோற்றுநர், நிர்வாக தலைவர் டான்ஸ்ரீ டத்தோஜோசப் அடைக்கலம் ஆகியோர் இன்று நிமயனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக மனிதவள அமைச்சுக்கு வருகை புரிந்த இருவரும், பின்னர் அமைச்சர் முன்னிலையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கல்வித் துறையைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள், திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இணைவது, உள்நாட்டு தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல்திறனை வலுப்படுத்த உதவும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

அதன் மூலம் அதிகமான உள்ளூர் மக்களுக்கு உதவுதல். மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியைப் பெறுவார்கள் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here