கோத்தா பாரு:
இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச் சேர்ந்த 4,398 பேராக இருந்தது.
சமூக நலத்துறையின் Info Bencana portal லின் படி, பாதிக்கப்பட்ட அனைவரும் இப்போது பாசீர் மாஸ் மற்றும் தானா மேராவில் உள்ள 12 நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், பாசீர் மாஸில் உள்ள சுங்கை கோலோக்கின் நீர் மட்டம் அபாய மட்டத்தில் (9.97 மீட்டர்) பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் கோலா ஜம்பு, தும்பாட்டில் உள்ள சுங்கை கோலோக் எச்சரிக்கை மட்டத்தில் (2.30 மீட்டர்) இருப்பதாகவும் Public InfoBanjir போர்டல் தெரிவித்துள்ளது.






















