சுங்கை பட்டாணி:
கெடா, புக்கிட் செலம்பாவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட செப்பு உலோகம் மற்றும் கம்பிகளை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று கிடங்குகள் நேற்று தீயில் எரிந்து நாசமானது.
நேற்றிரவு இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயற்பட்டு, 10.02 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) வான் முகமட் ஹமிசி வான் முகமட் ஜின் கூறினார்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் பற்றிய விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.




















