துவான் ஹாஜி இசாக் பின் ஸுல்கிப்ளி கராத்தே சுழற்கிண்ணம்

கே. ஆர். மூர்த்தி

அலோர்ஸ்டார், டிச. 7-

கோலமூடா மாவட்ட கராத்தே டோ கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கோலமூடா / யான் மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரி துவான் ஹாஜி இசாக் பின் ஸுல்கிப்ளி சுழற்கிண்ணப் போட்டியில்  250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டி வரும் 9.12.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சுங்கைபட்டாணி, செண்டரல் ஸ்கூவர் நான்காவது மாடியில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று ஏற்பாட்டுக்குழு செயலாளர் கோ. லலிதா அம்பிகை தெரிவித்தார்.

அனைத்துலக மலேசிய சோதோக்கன் கராத்தே கழகம்  கோலமூடா மாவட்டத்தில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டுத்துறை இலாகா, இளைஞர் விளையாட்டு மன்றம், மாவட்ட இலாகா, கல்வி இலாகா ஆகியவற்றின் முழு ஆதரவோடு இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோலமூடா மாவட்ட கராத்தே டோ கழகத்தின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான சுரேஸ் மாரியப்பன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியை கல்வி இலாகாவின் அதிகாரி துவான் ஹாஜி இசாக் பின் ஸுல்கிப்ளி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

நேற்று முன் தினம் கோலமூடா / யான் மாவட்ட கல்வி இலாகாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கராத்தே போட்டிக்கான சுழற்கிண்ணம், பதக்கங்களை கராத்தே பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்விற்கு பிறகு அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இப்போட்டியில் 50 தங்கம் 50 வெள்ளி, 100 வெண்கல பதக்கங்களுக்கு குறி வைத்து ஆரம்பத் தமிழ், மலாய், சீன,  இடைநிலை என 35 பள்ளிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

7 வயது முதல் 18 வயது உட்பட்டவர்கள் பங்கேற்கும் இப்போட்டி 24 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. இதில் ஆண்களுக்கு 12 பிரிவும் பெண்களுக்கு 12 பிரிவுமாக வயதிற்கு ஏற்றவாறு இப்போட்டி நடைபெறும்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதாக விளையாட்டு அரங்கிற்கு வருகை புரியும்படி  கோலமூடா கராத்தே டோ கழகத்தின் பயிற்றுநருமான திருமதி கோ. லலிதா அம்பிகை கேட்டுக்கொண்டார்.

 

படவிளக்கம்:-

படம் 1) துவான் ஹாஜி இசாக் பின் ஸுல்கிப்ளி சுரேஸ் மாரியப்பனிடம் சுழற்கிண்ணத்தை வழங்குகின்றார். உடன் கராத்தே பயிற்றுநர்கள், இலாகாவின் அதிகாரிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here