கோலாலம்பூர்:
வெளியுறவு அமைச்சகம் எந்த ஒரு அறிக்கைகளையும் ஊடகங்களுக்கு வெளியிடும் போது அனைத்துலக உறவுகளில் அவை பதற்றத்தையோ, குழப்பங்களையோ ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளனவா என்பதை கடுமையான கவனம் எடுக்க வேண்டும்.
அமைச்சகம் ஊடகங்களுடனான தனது உறவுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற் படுத்த வேண்டும் என்றும் சில புள்ளி விவரங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிடும் போது தூதரக நெறிமுறைகளைக் கடைப் பிடிக்கத் தவறக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் சுட்டிக் காட்டினார்.
வெளியுறவு அமைச்சகம் என்பது ஒரு நாட்டின் முக்கிய பல கொள்கைகளுக்கு கட்டுப் பட்டுள்ளதை கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே, சில அறிக்கைகளை வெளி யிடும்போது அது ஏதாவது நாடுகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடியதாக்க அமைந் துள்ளதா என்பதில் மிக்க கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். ஏனெனில் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்படும் எந்தவொரு அறிக்கையும் நாட்டின் இராஜதந்திர உறவுகலில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
காசா, பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பிரச்சனைகளில் நிலைப் பாட்டை வெளிப்படுத்துவதற்கு நாங்கள் கவனமாக ஒரு அறிக்கையை தொகுத்துள் ளோம் என்றார் அவர்.




















