பாப்பார் :
நேற்று, கம்போங் சும்பிலிங்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆட்டிஸம் நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
முகமட் நூஹ் இப்ராஹிம்முகமட் எட்டி பஹ்ரின், 24, என்ற நபரே நேற்று இரவு கம்போங் பெனோனியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, பாப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ரோஸ்லான் ஒஸ்மான் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் பாப்பார் தீயணைப்பு நிலையத்திற்க்கு வந்து, பாதிக்கப்பட்டவர் (Muhd Nuh) பாதுகாப்பான நிலையில் கம்போங் பெனோனியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர் என்றும், பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்போது அவர் குடும்பத்துடன் இருப்பதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை இரவு 9.17 மணிக்கு முடிந்தது என்று கூறினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட முஹமட் நூஹ் நேற்று கம்போங் சம்பைலிங் மோகோனில் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.